இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த கம்பீரமான புலி.. வயிற்றை கிழித்து பரிசோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் புலி சாம்பார் சாதம் சாப்பிட்டு உயிரிழந்ததாக தகவல் பரவிய நிலையில் அதற்கான உண்மை காரணம் குறித்து தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லையில் புலி ஒன்று வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடப்பதை வனத்துறை அதிகாரிகள் பார்த்த நிலையில் இது குறித்து விசாரிக்க தொடங்கினார்கள்.

.அந்த புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சாம்பார் சாதம் சாப்பிட்டதால் தான் புலி இறந்துவிட்டதாகவும், கிராமப்புறங்களுக்கு வருவதை தடுக்க யாராவது விஷம் வைத்திருப்பார்களா என்றெல்லாம் செய்திகள் பரவின.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே புலி இறப்பின் காரணம் தெரியவரும் என கூறப்பட்ட நிலையில் அதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை சாப்பிட்டதாக தெரிகிறது.

அந்த குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது. அது புலி வயிற்றுக்குள் சென்ற நிலையிலேயே அதன் வேலை காட்டி வந்துள்ளது.

பிறகு தான் வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறது.

ஒரு செண்டி மீட்டர் அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்தது வெளியே எடுக்கப்பட்டது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு துண்டு பிளேடு கம்பீரமான புலியின் உயிரை பறித்துள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers