அந்தரத்தில் அறுந்து விழுந்த ராட்ச ராட்டினம்.. கதறிய மக்கள்: வீடியோவில் சிக்கிய கோர விபத்து

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் ராட்ச ஊசல் ராட்டினம் பாதியில் அறுந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அகமதாபாத்தில் உள்ள பிரபல கேளிக்கை பூங்காவிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது. ஊசல் ராட்டினத்தின் ஒரு பகுதி அதன் முக்கிய அமைப்பின் மீது மோதி கீழே அறுந்து விழுந்துள்ளது. விபத்தின் போது ராட்டினத்தில் 31 பேர் சவாரி செய்துள்ளனர்.

விபத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 29 பேரில், 27 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறியதாவது, கோர விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிசாருடன், தடயவியல் நிபுணர்கள் குழுவும் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளன. மேலும், இதுபோன்ற சவாரிகளுக்கு கேளிக்கை பூங்கா சரியான உரிமம் பெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்