டோனியின் ரன் அவுட்டைக் நேரலையில் பார்த்த இளைஞருக்கு நேர்ந்த கதி... பரிதாப சம்பவம்

Report Print Santhan in இந்தியா

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட்டைக் கண்டவுடன் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய அரையிறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் டோனி அவுட்டான ரன் அவுட் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாகவே சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவின் Hooghly மாவட்டத்தைச் சேர்ந்த Srikanta Maity என்ற 30 வயது நபர் தன்னுடைய சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையில் மொபைல் போனில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை பார்த்துள்ளார்.

போட்டி இறுதிகட்டத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருந்தால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக் குறி எழுந்து கொண்டே இருந்தது.

இதில் இறுதிக்கட்டத்தில் டோனியை கப்தில் அற்புதமாக ரன் அவுட் செய்ய, மூன்றாவது நடுவர் அவுட் என்று கொடுத்தவுடன் அதைக் கண்ட Srikanta Maity அந்த இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பின் அங்கிருப்பவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள. ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்