6 மாதத்திற்கு முன்னே.. உலகக் கோப்பை முடிவுகளை புட்டு புட்டு வைத்த தமிழர்; வைரல் வீடியோ

Report Print Basu in இந்தியா

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி, ஆறு மாதங்களுக்கு முன்னே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உலகக் கோப்பை முடிவுகளை புட்டு புட்டு வைத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நேற்று நியூசிலாந்துடன் இந்தியா அணி தோல்வியடைந்த நிலையில் குறித்து வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ராசி பலன் குறித்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜோதிர் பாலாஜியிடம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் என்ன நடக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோதிடர். எனது கணிப்பை நான் கூறிகிறேன். அது நடப்பது கிரகத்தின் கையில் தான் இருக்கிறது. இந்த ஆண்டு கணிப்பின் படி, 2019 உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடக்கிறது.

இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில், இந்தியா, நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியுடன் மோதும்.

அதில், நியூசிலாந்து அணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன், தொடர் நாயகனாக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

நியூசிலாந்து அணி தான் 2019 உலகக் கோப்பையை கைப்பற்றும், கேன் வில்லியம் சன் தான் தொடர் நாயகனாக வாகை சூடுவார் என கணித்துள்ளார்.

தற்போது வரை ஜோதிடர் கணித்த படியே உலகக் கோப்பையின் முடிவுகள் வந்துள்ளதால் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்