மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியாமல் இருந்த கணவன்.. பின்னர் அவர் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்த மனைவி, முதல் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் தொடர்ந்து நட்பாக பழகியதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கொலை செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் குருசரண். இவருக்கும் சுரிந்தர் என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில காலத்துக்கு பின்னர் சுரிந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை குருசரண் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.

ஆனாலும் மனைவியுடன் அவர் சமாதானம் பேசி, இனி முதல் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் பழகக்கூடாது என கூறினார்.

இதற்கு சுரிந்தர் ஒப்பு கொண்டார். ஆனாலும் வாக்குறுதியை மீறி முதல் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் நட்பாக இருந்தார்.

இதை குருசரண் கண்கூடாக பார்த்த நிலையில் அவருக்கு கோபம் ஏற்பட்டு மனைவியுடன் சண்டை போட்டார்.

இதையடுத்து சுரிந்தர் காவல் நிலையத்துக்கு சென்று தனது பிரச்சனையை தீர்த்து வைக்க கோரினார்.

பின்னர் பொலிசார் குருசரணையும், சுரிந்தரையும் அழைத்து சமாதானம் பேசினார்கள். அப்போது சுரிந்தரின் சகோதரி மற்றும் மகனும் உடனிருந்தார்.

இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து மூவரும் வெளியில் வந்த போது ஆத்திரமடைந்த குருசரண் அவர்களை கூரான ஆயுதத்தை கொண்டு தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுரிந்தர் உயிரிழந்துவிட மற்ற இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய குருசரணை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...