மது அருந்திவிட்டு வாயில் துப்பாக்கியுடன் ஆட்டம் போடும் எம்.எல்.ஏ! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா
202Shares

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவர், வாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரனவ் சாம்பியன். பா.ஜ.கவைச் சேர்ந்த இவர் குறித்த வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் தற்போது வைரலானதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில் அவரும், அவரது நண்பர்களும் மது அருந்திவிட்டு நடனமாடுகின்றனர். அத்துடன் பிரனவ் தனது இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துள்ளார். அவற்றுடன் நடனமாடும் அவர், ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தனது வாயில் கவ்விக் கொள்கிறார்.

மேலும் தனது நண்பர்களுடன் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசுகிறார். இந்த வீடியோ குறித்து உத்தரகாண்ட் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அத்துடன், அவருக்கு துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, பத்திரிகையாளர் ஒருவருக்கு எம்.எல்.ஏ பிரனவ் கொலை மிரட்டல் விடும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பத்திரிகையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மூன்று மாதங்களுக்கு நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்