சென்னையில் வங்கி ஏடிஎம் மையத்தில், கேட்பாரற்று கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க போராடும் நேர்மையான முதியவர் அலைக்கழிக்கப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அயப்பாக்கத்தில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி ஏ.டி.எம். மையத்தில், பணம் எடுப்பதற்காக ராமச்சந்திரன் என்ற முதியவர் சென்றார்.
அப்போது அங்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக பத்தாயிரம் ரூபாய் கிடப்பதைப் பார்த்த அவர், அதை எடுத்துகொண்டு வங்கி மேலாளர் வாணி என்பவரிடம் சென்று தெரிவித்தார்.
ஆனால் வயதையும் பொருட்படுத்தாமல் 10 நாட்களாக நடையாய் நடந்தும், அந்த பணத்தை பெற்றுக்கொள்ளவோ, உரியவரை கண்டு பிடிக்கவோ வங்கி முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேர்மையாக இருக்கும் தான் அலைக்கழிக்கப்படுவதால், வேதனை அடைந்துள்ளார் ராமச்சந்திரன்.
இதையடுத்து தன்னை வேண்டுமென்றே மோசமாக நடத்தும் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.