வெளிநாட்டுக்கு கிளம்ப விமான நிலையம் வந்த தமிழர்.. பின்னர் அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா
347Shares

மலேசியாவில் இருந்து இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக வந்த தமிழர் தமிழகத்தின் திருச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மலேசியாவின் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (42). இவர் கடந்த 24ம் திகதி மலேசியாவில் இருந்து இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக திருச்சி வந்தார்.

பின்னர் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து வந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த மூர்த்தி, திருச்சியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் மலேசியா செல்ல இருந்தார்.

அப்போது அவர் அதிக குடிபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து மீண்டும் விடுதிக்கு வந்து அறையில் தங்கிய அவர் அதன் பிறகு இறந்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மூர்த்தி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனாலும் அவர் இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்