மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டு கதறிய கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்வருல் அசன் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மேன்ஹாஸ் (20) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வேலை செய்துவரும் அசன், இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய சொந்த ஊருக்கு திருப்பியுள்ளார்.

அங்கு கணவன் - மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்த மேன்ஹாஸ், கணவனை உதாசீனப்படுத்தியுள்ளார்.

உடனே ஆத்திரமடைந்த அசன், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், வீட்டில் இருவரும் தரையில் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அசனை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அசன் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers