அக்கா மகள் கிடைக்காத விரக்தி: திருமண மேடையை சோகமாக்கிய தாய்மாமன்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவையில் அக்கா மகள் கிடைக்காத விரக்தியில், தாய்மாமன் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பிரகாஷ் (28). இவருக்கும் ஈஸ்வர மூர்த்தி என்பவரது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில், நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து மணமகளின் தாயின் தம்பியும், தாய்மாமனுமான மோகன் (34) வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

பின்னர் விருந்தில் அமர்ந்து உணவருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். நேராக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து தன்னுடைய அக்கா மகள் பிறந்த தேதி 30.11.2001 என்றும், திருமணத்திற்கான வயது வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார் இரு வீட்டாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியுடன் நிறைந்து காணப்பட்ட திருமண மண்டபம் சோக மையமாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers