அரசியலில் களமிறங்குகிறார் டோனி..! பாஜக-வில் இணைகிறார்? ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு

Report Print Basu in இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியை, பாரதிய ஜனதா கட்சி ஜார்க்கண்ட சட்டசபை தேர்தலில் களம் இறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிரடியான ஆட்டம் மற்றும் சிறப்பான தலைமை பண்பினால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்றவர் மகேந்திர சிங் டோனி, குறிப்பாக இவருக்கு தென்னிந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

டோனியின் சொந்த மாநிலமைான ஜார்க்கண்டில், மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், டோனியுடன் பாஜக தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் கூறியதாவது. அரசியலில் ஈடுபட டோனி ஆர்வம் காட்டுகிறார். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பின்னர், பாஜக-வில் இணைவார். இணையும் திகதி-யை டோனியே முடிவு செய்வார் என தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியவாதத்தை நம்புகின்ற காரணத்தால் தான் டோனி பாஜக-வில் இணைவார். டோனி தனது தேசியவாத சித்தாந்தத்தை எவ்வித தடையின்றி சமூகத்திற்கு பங்களிக்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான். பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு டோனிக்கும் இருக்கிறது.

டோனி பாஜக-வில் இணையவில்லை என்றாலும், அவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவோம் என ஜார்க்கண்ட பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே, டெல்லி மாநில பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் "சமர்தானிற்கான சம்பார்க்" முயற்சியின் ஒரு பகுதியாக டோனியை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தனர் என்பது நினைவுக் கூரதக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers