உண்ண முடியாமல் துடி துடித்து இறந்த டால்பின்.. காரணம் நாம்: மனதை ரணமாக்கும் படம்

Report Print Basu in இந்தியா

மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேரும் போது, அது கடல் உயிரினங்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், மனிதர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில், தண்ணீர் பாட்டிலின் முத்திரை டால்பினின் முகவாயில் மாட்டிக்கொண்டு, அது வாயை திறந்து உண்ண முடியாமல் பசியால் துடி துடித்து இறந்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து அவலநிலையை உணருங்கள். தினமும் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்களுக்கு இதுபோல நிகழ்கிறது. எவ்வளவு கடினமானது இது. நீங்கள் கடற்கரையில் இருக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகளை கடலுக்கு அருகில் வீசுக்கூடாது என பர்வீன் கஸ்வான் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க உலக நாடுகள் ஒரு புறம் போராடி வந்தாலும், அதற்கான சரியான செயல்முறை திட்டமும், மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. அப்படியே அரசு சட்டம் கொண்டு வந்தாலும், மக்கள் அதை மீறுவதே இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

2050 ஆம் ஆண்டு கடலில் உள்ள கடல் உயிரினங்களின் எடையை விட, கடலில் இருக்கும் குப்பைகளின் எடை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...