தமிழகத்தை அதிரவைத்த இரட்டைக் கொலை: பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை வெட்டி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளிகள் விட்டுச் சென்ற பைக்கை கைப்பற்றிய பொலிசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த அஜித்(19) என்பவரும் வண்டி குடியிருப்புப் பகுதியை சேர்ந்த அர்ஜுன்(17) என்பவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் நண்பர்கள் இருவரும் இன்று நாகர்கோவிலை அடுத்த பறக்கை சி.டி.என்.புரம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் பைக் மீது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் திடீரென மோதினர். கீழே விழுந்த அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் சுதாரிப்பதற்கு முன்,

அவர்கள் நால்வரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்படியே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்ப முயன்றுள்ளனர்.

அப்போது பொதுமக்கள் அங்கு கூடியதால் ஒரு பைக்கை அந்த இடத்தில் விட்டுவிட்டு மற்றொரு பைக்கில் ஏறி நால்வரும் தப்பியுள்ளனர்.

இதனிடையே படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார்,

கிரிக்கெட் விளையாட்டின்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிலருடன் அஜித் மற்றும் அர்ஜுனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும்,

அந்த முன்விரோதம் காரணமாக அவர்கள் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி காதல் விவகாரம் காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கொலை நடந்த இடத்தில் கொலையாளிகள் விட்டுச் சென்ற பைக்கின் விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் மூன்றுபேரை பிடித்து விசாரணை நடத்திவருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers