பெண்ணை கட்டாயபடுத்தி பயன்படுத்தி கொண்டாரா முகிலன்? பெண் அளித்த பரபரப்பு புகாரில் கைது

Report Print Abisha in இந்தியா

பெண்ணை கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி, 37 வயதான இவர், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னை கட்டாயபடுத்தில் உறவு கொண்டதாக புகர் ஒன்று கொடுத்திருந்தார்.

அதில், முகிலன் செய்து வந்த சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடு வாசலில் நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றிருந்தேன். பின்னர் 27-ந் திகதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள அறையில் இருவரும் தங்கினோம்.

அப்போது முகிலன் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கட்டாயபடுத்தி என்னுடன் உறவு கொண்டார். மேலும், இதுபோன்று பலமுறை என்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர் மற்றும் பொலிசார் முகிலன் திருமணம் செய்து கொள்வதாக உத்தர வாதம் அளித்து ஏமாற்றுதல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் முகிலனை குளித்தலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான முகிலன் மீட்கப்பட்டுள்ளதால் அவரை துஷ்பிரயோக வழக்கில் கைது செய்ய குளித்தலை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக சென்னை பொலிசாருக்கு வாரண்டு அனுப்பி, அங்கேயே அவரை கைது செய்யவோ அல்லது முகிலனை குளித்தலை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கைது செய்து சிறையில் அடைக்கவோ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில், ஐ.ஜி தலைமையில் முகிலனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த விசாரணைக்கு பின் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு தான் அவர் சிறை செல்வாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவரா என்பது தெரியவரும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers