தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பேசவில்லை! கிரண்பேடி விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தமிழக மக்கள் குறித்து கூறிய கருத்துக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் தமிழக அரசும், மக்களின் சுயநலமும் தான் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் விளைவாக கிரண்பேடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தான் கூறிய கருத்துக்கு கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் நான் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள எந்த அணையிலிருந்தும் புதுவைக்கு தண்ணீர் வருவதில்லை.

நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுவையில் தண்ணீர் இருக்கிறது. ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்து வைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்சனை இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers