சீமான் என்ன விஞ்ஞானியா? கொந்தளித்த ஹெச்.ராஜா!

Report Print Abisha in இந்தியா

பாஜக தேசிய தலைவர் ஹச்.ராஜா சீமான், திருமாவளவன், திருமுருகன் காந்தி மூவரும் விஞ்ஞானிகளா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரியில் பாஜாகாவில் ஆள்சேர்ப்பு நிகழ்ச்சிக்கு பின் பேசிய பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பேசும் திருமாவளவன், சீமான், வைகோ, திருமுருகன் காந்தி அனைவரும் விஞ்ஞானிகளா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து மக்களை பீதியடையச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இவர்கள் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், வைகோவை நீதிமன்றமே ஒரு தேசத் துரோகி என்று முத்திரை குத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக-வில் மட்டுதான் வாரிசு அரசியலுக்கு இடம் அளிக்கவில்லை மற்ற கட்சிகள் பெரும் இடம் வாரிசுகளுக்கு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...