என்னை கேட்டுத்தான் சூரியன் உதிக்கின்றது- நிதியானந்தாவின் தடாலடி பேச்சு

Report Print Abisha in இந்தியா

நித்தானந்தாவின் பிடதியுள்ள தனது ஆசிரமத்துக்கு மேலே தினமும், தன் கட்டளைபடிதான் சூரியன் உதிப்பதாக நிதியானந்தா பேசியது வைரலாகி உள்ளது.

அண்மையில் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் வைத்து, சிஷ்ய கோடிகள் மத்தியில் பேசும் போது, அடித்த காமெடி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது பிடதியில் தன்னுடைய அனுமதியின்றி சூரியன் உதிப்பதில்லை என்றும் தான் தியானத்தில் இருந்து எழுந்து அனுமதி கொடுத்த பின்னரே சூரியன் உதிப்பதாகவும் நித்தியானந்தா தெரிவித்தார். சம்பவத்தன்று, தான் தியானத்தில் மூழ்கியதால் எழுந்திருக்க 40 நிமிடம் தாமதமானதால் சூரியனை 40 நிமிடம் தாமதமாகவே உதிக்க செய்ததாகவும் தற்பெருமை பேசி கொண்டார்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் கூகுளில் சென்று இன்றைய சூரிய உதய நேரத்தை தேடி பார்த்துக் கொள்ளும்படியும் நித்தி தெரிவித்தது வேடிக்கையாகவே உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers