சென்னையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் முன்நின்று நடத்தியவர் முகிலன். இவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்றப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொளி ஆதாரத்தினைச் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட பிப்ரவரி 15ஆம் திகதி முதல் காணாமல் போனார். அவரைக் கண்டுபிடித்துத் தரக் கோரி தமிழகமெங்கும் அடையாளப் போராட்டங்களும், நடத்தப்பட்டது.
இந்நிலையில் அவர் நேற்று ஆந்திர மாநிலத்தில் பிடிபட்டதாக வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டது. இது குறித்து பேசிய சீமான் சகோதரர் முகிலனை விரைவாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பும் அளித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.