காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினை... விமானத்துக்கே மிரட்டல் விடுத்த நபர்

Report Print Abisha in இந்தியா

காதலியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ மற்றும் truejet விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த விமானங்களில் சோதனை செய்ததில் அந்த தகவல் வெறும் புரளி தான் என்று உறுதி செய்தனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் என்பவர் காதலில் ஏற்பட்ட பிரச்னையால் குடித்து விட்டு, போதையில் வெடிகுண்டு மிரட்டல் இந்த மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்களில் ஒன்றான ட்ரூஜெட் விமானத்தில் சென்னைக்கு பயணம் செய்ய ஐதராபாத் விமான நிலையத்திற்கு விஸ்வநாதன் வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போ இந்த மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers