அவர் பேசியது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தது: முகிலன் பிடிப்பட்டது குறித்து பொலிசார் தெரிவித்தது.!

Report Print Abisha in இந்தியா

திருப்பதி ரயில் நிலையத்தில் சமூக போராளி முகிலன் நேற்று பிடிப்பட்ட நிலையில், அவரை எப்படி பிடிபட்டார் என்பது குறித்து இரயில்வே காவல் ஆய்வாளர் சாய்தையா பேசியுள்ளார்

பல மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் காணாமல் போன முகிலன் எங்கே என்று தொடர்ந்து பொலிசார் தேடி வந்தனர். மேலும், முகிலன் காணாமல் போனது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் பிடிக்கப்பட்டு அழைத்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனால் பலரும் நிம்மதி அடைந்தனர்.

தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் சாய்தையா முகிலன் பிடிப்பட்டது குறித்து செய்தியார்களுக்கு பேசியதாவது, "நேற்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாடியுடன் காணப்படும் நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்று திருப்பதி ரயில்வே போலீசாருக்கு காலை மணி 10.40 க்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் முகிலன் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு சென்ற ரயில்வே போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்ற போது, ஆவேசம் அடைந்தவர் போல் காணப்பட்ட அவர், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு எதிராகவும் தமிழில் கோஷம் எழுப்பியவாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்அவரை தடுத்து நிறுத்தி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தோம். ஆனால் அவர் எங்களுக்கு ஆந்திர சகோதரர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோஷம் போட்டார்.

முகிலன் போட்ட கோஷத்தை புரிந்து கொள்ள முடியாத நாங்கள் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி ரயில்வே காவல் நிலையத்தில் அமர வைத்திருந்தோம்.நாங்கள் கொடுத்த மதிய உணவை சாப்பிட்ட அவர் என்னுடைய ஊர் காட்பாடி என்று கூறினார். எனவே அவரை காட்பாடிக்கு ரயிலில் அனுப்பி வைக்க முடிவு செய்தோம்.இந்த நிலையில் திருப்பதி ரயில்வே காவல் நிலையத்தில் முகிலன் இருப்பது பற்றிய தகவல் அறிந்த தமிழக சிபிசிஐடி போலீசார் எங்களை தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டனர்.

சற்று நேர குழப்பத்திற்கு பின் தமிழக சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைத்த முகிலனின் புகைபடத்தைப் பார்த்த நாங்கள் போலீசார் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து வைத்து இருக்கிறோம் என்று உணர்ந்து கொண்டோம். இந்த நிலையில் தமிழக சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முகிலனை ரயில்வே போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ரயிலில் காட்பாடிக்கு அனுப்பிவைத்தோம்.தமிழ் நாடு போலீசார் எங்களை தொடர்பு கொள்ளும் வரை அவரை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...