திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுடன் உல்லாசம்! போராட்டத்தில் குதித்த காதலி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூணான்டியூர் பகுதியைச்சேர்ந்தவர் ஹரிகரன். 22 வயதான இவர் இதே கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (19) என்பவரும் சேலத்தில் இருக்கும் ஐ.டி.ஐ ஒன்றில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.

முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் அதன் பின் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து வந்துள்ளனர். அதன் பின் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது ஹரிகரன் ரமணியிடம் திருமண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன் பின் ஹரிகரனிடம் ரமணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வர, ஹரிகரன் திருமணத்திற்காக ஆதார்கார்டை எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

ஆனால் அதன் பின் திருப்பூருக்கு வராத காரணத்தினால், ஏமாற்றம் அடைந்த ரமணி ஹரிகரனை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் ஹரி மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரமணி நேற்று முன் தினம் மேச்சேரி வந்து காதலன் ஹரிகரன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஹரிகரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து அங்கு விரைந்து வந்த பொலிசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவரோ ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என கூறி அடம் பிடித்துள்ளார்.

அதன் பின் இறுதியாக அவரை சமாதானம் செய்து இரவு 10 மணிக்கு அங்கிருந்து பொலிசார் அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்று காலை ரமணி மீண்டும் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் மறுத்தால் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கூற, பொலிசார் மீண்டும் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி நிச்சயமாக இதற்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...