வைகோ மீதான வழக்கு.. கருத்து சுதந்திரத்தின் கோரத்தாக்குதல்! கொந்தளித்த சீமான்

Report Print Kabilan in இந்தியா

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கு, கருத்து சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், வைகோ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.

இன்னும் சில நாட்களில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில், பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென வைகோவைக் குற்றவாளி என தீர்ப்பளிப்பது என்பது, நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும், வினாக்களையும் எழுப்புகிறது.

ஈழத்தாயகத்தின் விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக, தேசத்துரோகி எனப்பழி சுமத்தப்பட்டுத் தண்டனைப் பெற்றுள்ள வைகோவிற்கு மேல்முறையீட்டில் நீதி கிடைக்க, அவரது கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...