வைகோவிற்கு ஏற்பட்ட கதி தான் சீமானுக்கும்: சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்

Report Print Basu in இந்தியா

தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை வரவேற்ற,பாஜக ஆதரவாளரும், பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி, திருமுருகன் காந்தி, சீமான் ஆகியோரும் இதே போல் தண்டிக்கப்பட வேண்டும் என சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு வைகோ மீது பதிவான தேச துரோக வழக்கு குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், வைகோவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் விதித்த ரூ. 10 ஆயிரம் அபராதத்தை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு அவசர மனுவும் தாக்கல் செய்துள்ளார். கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை ஒருமாதத்துக்கு நிறுத்திவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வகையில் நடிகை காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டதாவது, இந்த பட்டியலில் இன்னும் பல பேர் சேர்க்கப்பட வேண்டும். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருடன், எதிர்மறையான கோட்பாட்டைக் கொண்டு வந்து, இந்தியாவுக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட் வேண்டும் என சர்ச்சையை கிளப்பும் வகையில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers