காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை.. தப்பியோடிய கணவன்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சின்னநாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தனது கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் சேர்ந்து தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவகாமி பொலிசில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகாமி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அவரது கணவர் ராஜா, ஆடு கட்டும் கயிற்றால் சிவகாமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...