செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி: தொண்டையில் உணவு சிக்கி கணவனுக்கு நிகழ்ந்த பரிதாபம்

Report Print Abisha in இந்தியா

மனைவியுடன் செல்போனில் பேசிவாறு உணவு உண்ட கணவன் விக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் வசித்து வருகின்றனர் புருஷோத்தமன் சண்முகசுந்தரி தம்பதியினர். கடந்த 6மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், சண்முகசுந்தரி பெற்றோரை காண வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால் புருஷோத்தமன் அவரை தாய்வீட்டில் விட்டுவிட்டு இருதினங்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நாட்களில் புருஷோத்தமன் தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம், மனைவியிடம் செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உண்ண பரோட்ட வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து சப்பிட்டு கொண்டே மனைவியிடம் செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டுள்ளது. மனைவி செல்பேசியில் தண்ணீர் குடியுங்கள் என்று பலமுறை கத்தியும் அவர் அமைதியாக இருந்துள்ளார். இதனால் சண்முக சுந்தரி தொடர்பை துண்டித்துவிட்டு மீண்டும் அவருக்கு அழைத்துள்ளார் ஆனால் அழைப்பை எடுக்கவில்லை. உடனடியாக சண்முகசுந்தரி உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, பார்க்க கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது புருஷோத்தமன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தவர்களுக்கு புருஷோத்தமன் இறந்துவிட்டார் என்ற சோகசெய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், இறப்பிற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers