சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்... ரோந்து பொலிசாருக்கு காத்திருந்த சம்பவம்

Report Print Abisha in இந்தியா

தெலுங்கானாவில் கன்சல்டன்சி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சொகுசு காரினுள் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பைசல் என்பவர் யூ.எஸ். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் சில காலமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பைசல் என்ற இளைஞர் ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பல இடங்களில் சுற்றியதாக கூறப்படுகிறது.

பின்னர் ஐதராபாத் நெடுஞ்சாலையில் காரில் இருந்தபடி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. அவ்வழியாகச் சென்ற ரோந்து போலீசார் காரில் அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு பைசல் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பைசல் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு யாராவது உடன் இருந்து அவரை கொல்ல முயற்சித்தார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers