50 லட்சம் வேண்டும்... இறுதி சடங்கிற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன்! மரண பீதியில் தொழிலதிபர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தொழிலபதிபரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டி, இறுதி அஞ்சலிக்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறிய ரவுடி இம்ரான் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை, பாலாஜி நகர், ஸ்ரீபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் மக்பூல் பாஷா. தொழிலதிபரான இவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த 1-ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.

நான் கேட்ட பணத்தை இரண்டு நாட்களில் கொடுக்கவில்லை, என்றால் என் தம்பி மற்றும் குடும்பத்தினரில் யாரையாவது ஒருவரை கொலை செய்துவிட்டு, அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி நீ எங்கு சென்றாலும் எனக்கு பரவாயில்லை, பணத்தை கொடு என்று மிரட்டினார். இதனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இது குறித்து மக்பூல் பாஷாவிடம் பிரபல தமிழ் ஊடகம் கேட்ட போது, என் குடும்பத்தினர் குறித்த விவரங்களும், என் தொழில்கள் குறித்த தகவல்களும் என்னை மிரட்டிய ரவுடி இம்ரானுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது.

அவன் என்னிடம் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸை முதலில் மிரட்டினேன். அதன்பிறகு அவரைக் கொலைசெய்தேன்.

அவனைப் போன்றே உன்னை கொலை செய்துவிடுவேன் என்று உருது மொழியில் மிரட்டினான், நான் ஏற்கனவே 10 பேரை கொலை செய்திருக்கிறேன், உன்னை 11-வது நபராக கொலை செய்வேன் என்றான்.

அதன் பின் அவனைப் பற்றி இணையத்தில் தேடிய போது, அவன் கூறியது எல்லாமே உண்மை என்பது தெரியவந்தது.

அவனுக்கு நான் 50 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் என்னை அல்லது என் குடும்பத்தில் யாரையாவது கொலை செய்துவிட்டு இம்ரான் கொடுக்கும் 10 லட்சம் ரூபாயில் இறுதி அஞ்சலியைச் செய்ய வேண்டும் என்று கூறினான்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என் குடும்பத்தினர் வெளியில் எங்கும் செல்வதில்லை. ஸ்கூலுக்குச் செல்லும் குழந்தைகளைக் கடத்திவிடுவதாகவும் இம்ரான் மிரட்டினார். எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் பொலிசார் இம்ரானை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்