கணவரை பிரிந்துவிட்டு வேறு நபருக்கு ஆசைநாயகியாக இருந்த இளம்பெண்.. அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு வேலை தருவதாக கூறி அவரிடம் மோசமாக நடந்து கொண்டதோடு, வேலை தராமல் ஏமாற்றிய அதிகாரி மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் மோகன் ராவ். வனத்துறை அதிகாரி ஆவார்.

இந்நிலையில் இளம்பெண்ணொருவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

வனத்துறையில் பணி இருப்பதை கேள்விப்பட்ட அப்பெண் இது தொடர்பாக மோகனை சந்தித்து பேசினார்.

அப்போது ரூ 4 லட்சம் கொடுத்தால் அரசு பணி கிடைக்கும் என மோகன் கூறிய நிலையில் தன்னிடம் ரூ 2 லட்சம் மட்டுமே இருப்பதாக கூறிய அப்பெண் பணத்தை அவரிடம் கொடுத்தார்.

இதையடுத்து மீதி பணத்துக்கு பதிலாக தனக்கு மனைவி போல சில காலம் இருந்தால் வேலை வாங்கி தருவதாக மோகன் கூறிய நிலையில் அப்பெண் சம்மதித்தார்.

ஐந்து மாதங்கள் அப்பெண்ணுடன் ஜாலியாக மோகன் இருந்தார், பின்னர் அவர் தனக்கு வேலை வேண்டும் என கேட்க அதெல்லாம் வாங்கி தரமுடியாது என மோகன் கூறியதோடு அவரிடம் இருந்த வாங்கிய 2 லட்சத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் மோகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...