திருமண விழாவில் கர்ப்பிணி வயிற்றில் உதைத்த கும்பல்: இறந்த குழந்தையுடன் பொலிசாரை நாடிய பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விழாவில் ஏற்பட்ட கலாட்டாவில் கும்பல் ஒன்று கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் உதைத்த சம்பவத்தில் அவர் பொலிசாரை நாடியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியில் திருமண விழா ஒன்று நடந்துள்ளது. அதில் தவஸும் என்ற 26 வயது யுவதி தமது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.

திருமண விழாவில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இதில் விருப்ப பாடலை கேட்டு தவஸுமின் கணவருக்கும் அங்கிருந்த இளைஞர் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் அந்த இளைஞர் கும்பல் தவஸுமின் கணவர் இம்ரான் மீதிருந்த ஆத்திரத்தை கர்ப்பிணியான தவஸும் மீது காட்டியுள்ளது.

அவரது வயிற்றில் உதைத்த அந்த கும்பல், இம்ரானையும் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அலறித் துடித்த தவஸும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியிலேயே அவருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவர்கள் நடத்திய சோதனையில், வயிற்றில் உதைக்கப்பட்டதாலையே அவருக்கு கரு கலைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இறந்து பிறந்த பிள்ளையுடன் தவஸும் பொலிசாரை நாடியுள்ளார். தொடர்ந்து தவஸும் மீது தாக்குதலில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் மீது வழக்குப் பதிந்த பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...