தமிழகத்தில் வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு... வெற்றி பெறுமா அதிமுக கூட்டணி?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் தான் மக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

இதில் பாஜக கூட்டணி மத்தியில் 303 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.

ஆனால் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். 22 ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறும் நாள். வாக்குப் பதிவு முடிந்து ஆகஸ்ட் 9 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்