கோவிலில் பெண் குளிப்பதை ரகசிய கமெரா மூலம் வீடியோ எடுத்த அதிகாரி.. அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த அறநிலையத்துறை இணை ஆணையாளா் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளராக பொறுப்பு வகிப்பவா் பச்சையப்பன். பிறந்த நாளன்று சக ஊழியா்கள் கட்டாயம் பரிசு கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக கட்டளையிட்டது உள்ளிட்ட பல சா்ச்சைகளில் சிக்கியிருந்தாா்.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய சா்ச்சையில் பச்சையப்பன் சிக்கியுள்ளாா். கடந்த 28ம் திகதி மகாலிங்கம் கோவிலில் உண்டியல் எண்ணும் பணிக்காக பெண் உதவி ஆணையா் சென்றுள்ளாா். உண்டியல் எண்ணும் பணியை முடித்துக் கொண்டு கோவிலில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளாா்.

அப்போது பச்சையப்பன் ரகசிய கமெரா மூலம் பெண் அதிகாாி குளிப்பதை வீடியோ எடுத்துள்ளாா். இது தொடா்பாக பெண் அதிகாாி சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் பொலிசார் பச்சையப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...