மனைவியை கண்முன்னே தூக்கிச் சென்று... ஆணவக்கொலையின் உச்சத்தை கண்ணீர் மல்க கூறிய கணவன்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் குழந்தை பெற்று ஒரு வாரமே ஆன நிலையில், மகளை பெற்றோர் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் உசிரிபெண்ட்ட கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி. இவர் கேசவலு என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபரை காதலித்து வந்தார்.

அதன் பின் இவர்களின் காதலுக்கு ஹேமாவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

அப்போது ஹேமாவதிக்கு குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில், அவரின் பெற்றோர் அவரை கொடூரமாக அடித்து கொலை செய்துவிட்டு, குழந்தையை மட்டும் தூக்கிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஹேமாவதியின் கணவர் கூறுகையில், நானும் ஹேமாவும் சில வருடங்களாக காதலித்துவந்தோம்.

அது, ஹேமாவின் வீட்டுக்குத் தெரிந்து, எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். இதனால் ஆத்திரமடைந்த ஹேமாவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், காவலர்கள் எங்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு, ஹேமாவின் உறவினர்கள் இப்போது அவளுக்குத் திருமணம் செய்தால் அவளின் படிப்பு பாழாகிவிடும். எனவே, அவள் படிப்பை முடிக்கும் வரை நீ காத்திருக்க வேண்டும் என கூறியதால், நாங்களும் அவர்களின் வார்த்தையை நம்பி சென்ற போது, வீட்டிற்கு சென்றவுடன் ஹேமாவை தந்தை அவளை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் அவரிமிருந்து தப்பிய அவள் என்னிடம் வந்தாள். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

இருப்பினும் ஹேமாவின் தந்தை எங்களை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், அவருக்குப் பயந்து நாங்கள் சித்தூர், அனந்தபூர், பெங்களூரு போன்ற பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டோம். அப்போதும் அவர் எங்களை விடவில்லை.

இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது, ஒரு வருடத்துக்குப் பிறகு, திடீரென ஒருநாள் என் மனைவிக்கு அவளின் சகோதரி போன் செய்து பேசினாள்.

அதில், ஹேமா தன் கல்லூரி படிப்பு பாதியிலேயே முடிந்ததால் அவளின் சான்றிதழ்களை அளிப்பதாகவும் அதனால், ஹேமா மேற்கொண்டு தன் படிப்பைத் தொடரமுடியும் என்றும் கூறி, எங்களை கல்லூரிக்கு வரச் சொன்னாள்.

நாங்களும் அங்கு நம்பி சென்ற போது, அங்கு அவளின் தந்தை மற்றும் உறவினர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம், அவர்கள் ஹேமாவை என்னிடமிருந்து பிரித்து தூக்கி சென்றுவிட்டனர்.

இதனால் இது குறித்து காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், அவர்கள் அது இந்த காவல்நிலைய எல்லைக்குள் வரவில்லை என்று வேறு காவல்நிலையத்திற்கு சென்றால், அவர்களும் அது இதற்குள் வரவில்லை என்று கூறி அலைக்கழித்தனர்.

அதன் பின் எப்படியோ அவள் மூன்று நாட்கள் கழித்து தந்தையிடமிருந்து தப்பி என்னிடம் வந்தாள். அதன் பின் அவர்கள் என் தந்தையிடம் ஜாதியைப் பற்றி கூறி மிகவும் மோசகாம நடந்து கொண்டார். தொடர்ந்து பிரச்சனை செய்த வண்ணமே இருந்தார்.

அப்படி இருக்கையில், ஒரு வாரத்திற்கு முன்பு தான் எங்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த தகவலை அறிந்த ஹேமாவின் தந்தை, கோபத்தின் உச்சிக்கு சென்று அவளை கடத்திச் சென்று கொலைசெய்து கிணற்றில் வீசிவிட்டார்.

குழந்தை பெற்று ஒரு வாரம்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், எங்கள் வாழ்வு இப்படி முடிந்துவிட்டது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் ஹேமாவின் தந்தை உட்பட அவரின் குடும்பத்தினர் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹேமாவதியின் கொலைக்கு அவரின் தந்தை உட்பட இன்னும் பலர் காரணம் எனவும், புகார் பதிவுசெய்யாத காவலர்களும் அவரின் கொலைக்கு முக்கியக் காரணம் என்று கேசவேலுவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்