தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த புதுமணத்தம்பதி... நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி நள்ளிரவில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த திருமணி என்பவரது மகன் சோலைராஜ்.

இவர் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்துள்ளார். அதே உப்பளத்தில் அழகர் என்பவரது மகள் ஜோதி வேலை பார்த்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து விபரம் தெரியவரவே இருவரும் வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர் என்பதால் ஜோதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலையில் சோலைராஜ் வீடு வெகுநேரமாக திறக்கவில்லை என்பதால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, வீட்டின் முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் விரைந்து வந்து தம்பதியினர் இருவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து ஜோதி உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த ஜோடியை நள்ளிரவில் மர்ம கும்பல வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்