தமிழரை தேடிவந்து சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ... என்ன காரணம் தெரியுமா?

Report Print Abisha in இந்தியா

கோவையில், மலிவு விலை நாப்கின் இயந்திரத்தைத் தயாரித்த முருகானந்தத்தை, கிரிக்கெட் வீரர் பிராவோ தேடி வந்து சந்தித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம், பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள் பெண்களுக்கான மலிவான விலை நாப்கீன் தயாரிப்பு இயந்திரத்தை கண்டுபிடித்தவர். நீண்ட கால போராட்டத்திற்கு பல அங்கிகாரம் அவருக்கு கிடைத்தது. அதில் ஆஸ்கர் விருது முதல் தமிழக அரசின் பாடப்புத்தகம் வரை முருகானந்தத்தின் முயற்சிக்கு தற்போதுவரை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான பிராவோ, முருகானந்தத்தை கோவை வந்து சந்தித்துள்ளார்.

எதற்காக என்றால், பிராவோவின் சொந்த நாடான டிரினிடாட் டொபாகோவில், பள்ளிக் குழந்தைகள் பலரும் மாதவிடாய்ப் பிரச்சினையால், பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்களாம். மேலும், அங்குள்ள கிராமப்புற பெண்களுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பிராவோ தன்னால் முடிந்த முயற்சி செய்துவருகிறாராம். இந்த நிலையில், முருகானந்தம் குறித்து கேள்விப்பட்ட பிராவோ, அவரை சந்திப்பதற்காக கோவைக்கு வந்துள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் பிராவோ தனது சொந்த நாட்டில் இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு போதிய அளவில் சுகாதாரம் ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கையுடன் சென்றுள்ளாரம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தச் சந்திப்புக்கு முன்பு வரை, முருகானந்தத்துக்கு பிராவோ யார் என்றே தெரியாதாம்.!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்