அம்மா இறந்தது தெரியாமல்... குட்டி காண்டாமிருகம் செய்த செயல்: உருக வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

மனிதர்களால் வேட்டையாடப்பட்டு அம்மா இறந்து கிடப்பது தெரியாமல், குட்டி காண்டாமிருகம் முட்டி எழுப்பும் காட்சி உருக வைத்துள்ளது.

உலகில் மிகவும் மோசமான, ஆபத்தான உயிரினமாக மனித இனம் மாறி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் கடலை மாசு படுத்தி கடல் உயிரினங்களை அழித்து வரும் மனிதர்களே, மிருகங்கள் வாழும் காடுகளில் வீட்டை கட்டி, அதன் வாழ்விடங்களை ஆக்கிரமித்து, காடுகளின் வளத்தை அழித்து வருகின்றனர்.

மாறுபுறம் பணத்திற்காக மிருகங்களை வேட்டையாடி மிருகங்களை விட மனித இனம் மோசமானது என்பதை நிரூப்பித்துள்ளனர். இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்ற இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொம்புக்காக மனிதர்களால் வேட்டையாடி கொல்லப்பட்ட அம்மா காண்டாமிருகத்தை, அதன் குட்டி காண்டாமிருகம் முட்டி எழுப்புகிறது.

இந்த வீடியோவை கண்டு கவலை வெளியிட்ட பலர், இந்த உலகத்தில் மனிதர்களை விட கொடிய மிருகம் ஏதும் இல்லை என ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்