கட்சி தலைவராக தொடர்வாரா ராகுல் காந்தி?... போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் தொண்டர்கள்

Report Print Abisha in இந்தியா

ராகுல் காந்தி தனது கட்சி தலைவர் பொறுப்பிலிந்து விலக இருப்பதாக அறிவித்ததில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய காங்கிரஸ் எம்.பியுமான சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என ராகுல்காந்தி தெரியபடுத்தி உள்ளார்.

ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் வீட்டின் முன் காங்கிரஸ் இளைஞர் அணி தொண்டர்கள் ராகுல் காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர்.

இதனை அடுத்து #MyLeaderRahulGandhi என்ற ஹாஷ்டாக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers