அடிக்கடி வெளியூருக்கு சென்ற கணவன்.. அப்போது மனைவி செய்த செயலால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவரை ஆற்றில் கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். மரம் ஏறும் தொழிலாளி. இவர் மனைவி பாக்கியலட்சுமி. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

முருகன் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருவார்.

கடந்த 23.4.2019 அன்று வேலைக்கு சென்ற முருகன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து பாக்கியலட்சுமி, தனது கணவரை காணவில்லை என பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் முருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 28.4.2019 அன்று சங்கராபரணி ஆற்றில் ஆண் பிணம் ஒன்று பாதி புதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மாயமான முருகன் என்பது தெரியவந்தது.

இது குறித்த விசாரணையில் முருகனின் செல்போனை சங்கர் (40) என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சங்கரை பிடித்து பொலிசார் விசாரித்ததில் கலியமூர்த்தி (45) என்பவருடன் சேர்ந்து முருகனை கொலை செய்து ஆற்றில் புதைத்தது தெரியவந்தது.

மேலும் முருகனின் மனைவி பாக்கியலட்சுமிக்கும் அவரது உறவினர் கலியமூர்த்திக்கும் சுமார் 4 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்ததும், அதற்கு இடையூறாக இருந்த முருகனை திட்டம் போட்டு அழைத்துச் சென்று நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து சங்கராபரணி ஆற்றில் புதைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers