அரசியலில் கால்பதிக்க தயார்... அதிரடி காட்டும் சத்யராஜ் மகள்

Report Print Vijay Amburore in இந்தியா

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விரைவில் அரசியலில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சத்தியராஜின் மகளும், அனுபவமிக்க ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்தியராஜ், உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அக்ஷய பத்ராவின் தூதராக இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மருத்துவத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் அலட்சியம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது ஊடகங்கள் அனைத்திலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது.

கிராமப்புறங்களில் வைட்டமின் குறைபாடு குறித்த பட்டறைகளை நடத்தும் திவ்யா, மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு தீர்வு காணுமாறு தமிழக சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டு வந்து திவ்யா விரைவில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம் என்கிற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் அதற்கு திவ்யா மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், அரசியலைப் பற்றி கற்றுக்கொள்வதில் நான் எப்போதுமே ஆர்வமாகவே இருந்து வருகிறேன். ஆனால் உண்மையில் ஒருபோதும் அரசியலை நோக்கி சாய்ந்திருக்கவில்லை.

ஆனால் இன்று, நான் நம்புகிறேன். குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு நம்பிக்கையையும் குணத்தையும் தரும் ஒரு உலகளாவிய சுகாதார அமைப்பு நமக்கு மிகவும் தேவை. மருத்துவ உதவி மிகவும் தேவைப்படும் மக்களுக்கு மறுப்பது நியாயமற்றது.

அனைவருக்கும் சேவை செய்யும் ஒரு சுகாதார அமைப்பு எங்களுக்கு தேவை. நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதால், எனது கவனம் எப்போதும் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மீதுதான் இருந்தது.

ஆனால் நம் நாட்டில் கவனம் தேவைப்படும் பிற சிக்கல்களும் உள்ளன. சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு ஒருவர் அமைப்பில் இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.

மேலும் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். எனவே, விரைவில் அரசியலில் இறங்குவேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers