இதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார்... அதிரவைத்த நடிகர் விஷால் தந்தை

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய வடிவேலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் விஷால். இவர் தந்தை ஜி.கே. ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார்.

இந்நிலையில் கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் ரெட்டியிடம் 86 லட்சம் ரூபாயை ரெட்டி ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் விஷாலின் தந்தை ரெட்டி பொலிஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதனை சந்தித்து தாம் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்தார்.

அதில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம், ஜல்லி கேட்டு பணம் கொடுத்ததாகவும், அவர், ஜல்லியும் கொடுக்காமல், பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார்.

இதன் பேரில், கைது செய்யப்பட்ட கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers