மீண்டும் TikTok செயலியால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி

Report Print Givitharan Givitharan in இந்தியா

சீனாவில் உருவாக்கப்பட்ட TikTok செயலியானது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்த செயலியின் ஊடாக தமது திறமைகளை உலகிற்க நிரூபிப்பதற்கு முனைந்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு முயற்சியில் 19 வயது இளைஞனின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் கர்நாடகாவின் Tumakuru எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டண்ட் முயற்சி ஒன்றினை வீடியோ பதிவு செய்யும்போது குமார் எனும் குறித்த இளைஞனின் முதுகு தண்டுவடம் பலத்த காயத்திற்கு உட்பட்டுள்ளது.

இவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதற்காக நண்பரின் உதவியுடன் பேக்பிலிப் எனப்படும் பின்புறமாக குதித்தலில் ஈடுபட்டார்.

ஆனால் கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவர் தடுமாறியதில் அவரது தலை நேரடியாக தரையில் மோதியது.

இதனை அடுத்து விக்டோரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

எனினும் இதற்கிடையில் குறித்த வீடியோ TikTok செயலியின் ஊடாக அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers