விஜயகாந்த் சேர்த்து வைத்த பெரிய சொத்து.... நேரில் தேடிச்சென்று நலம்விசாரித்த இலங்கை எம்பி

Report Print Vijay Amburore in இந்தியா

திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த இலங்கை எம்பி சையத் அலி ஜாஹிர், விஜயபிரபாகரனை நேரில் சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலில் கால்பதித்த ஒரு திடமான நபர் தான், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.தன்னுடைய நடிப்பின் மூலமாகவும், இயல்பான பேச்சாலும் தமிழக மக்கள் மனதில் அசையாத ஒரு இடத்தினை பிடித்தவர்

தமிழீழ தலைவர் பிரபாகரன் நினைவாக தன் மகனுக்கு விஜயபிரபாகரன் என பெயர் வைத்து, இலங்கை மக்களின் மனதிலும் இடம்பிடித்திருந்தார்.

2011ம் ஆண்டு ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் எதிர்த்ததிலிருந்தே, சிறிது சிறிதாக அரசியலில் இருந்து கீழிறங்க ஆரம்பித்தார். இதற்கு அவருடைய மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீசும் தான் காரணம் என ரசிகர்கள் ஒருபுறம் குற்றம் சுமத்தியபடியே உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க உடல்நிலை சரியில்லாமல் அவஸ்தையடையும் விஜயகாந்த், நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்பதற்காக, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

அதே விடுதியில் தான் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு எம்பியும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமானசையத் அலி ஜாஹிர் தங்கியிருந்துள்ளார்.

விஜயகாந்த் மகன் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பதை கேள்விப்பட்ட சையத் அலி, உடனடியாக நேரில் சென்று விஜயபிரபாகரனை சந்தித்துள்ளார்.

அங்கு விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்ததோடு, அரசியலில் கால்பதித்திருக்கும் விஜயபிரபாகரனுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers