மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா
167Shares

நெல்லை மாவட்டத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம் என்பவரின் மனைவி முத்துமாரி கடந்த வியாழக்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் மோப்ப நாய் கொண்டு விசாரணை மேற்கொண்டபோது, அந்த நாய் வீட்டையே சுற்றி வந்துள்ளது.

மேலும் கைரேகை நிபுணர்களுக்கு கிடைத்த தடயங்களின்படி, கோமதிநாயகத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனைவி முத்துமாரி ஆசையாக கேட்டதால், கோமதிநாயகம் ஸ்மார்ட்போன் ஒன்றினை வாங்கிக்கொடுத்துள்ளார். அதன்மூலம் பேஸ்புக்கில் கணக்கு துவங்கிய முத்துமாரி, அதிலேயே மூழ்கிக்கிடந்து நண்பர்கள் பலருடனும் சாட் செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதனால் பல நாட்கள் கோபமாக இருந்த கோமதிநாயகம், வியாழக்கிழமையன்று முத்துமாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

உறவினர்கள் யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒன்றும் தெரியாதவர் போல வெளியில் சென்றுவிட்டு, உறவினர்களுடன் சேர்ந்து அழுதுகொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers