கண்ணில் பட்டவர்களை சரமாரியாக முட்டி தூக்கிய முரட்டுக்காளை: சிசிடிவி-யில் பதிவான காட்சி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முரட்டுக்காளை ஒன்று சாலையில் சென்றோரை விரட்டி விரட்டி முட்டித்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில், முதியவர் ஒருவர் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் சாதுவாக நின்று கொண்டிருந்த காளை ஒன்று, முதியவரை முட்டித்தள்ளியது. இதனால் கீழே விழுந்த முதியவர், அச்சத்துடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், ஆக்ரோஷமாக காளை மீண்டும் முதியவரை துரத்தித் தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அருகிலிருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி, முதியவரை மீட்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இதேபோன்று, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரையும் முரட்டுக்காளை முட்டித் தள்ளியது. இதில் முதியவரும், இளைஞரும் காயமடைந்தனர். அதனால் அவ்வழியாக செல்வதற்காக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்