பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தமிழர்கள் சினிமா பைத்தியம் என சர்ச்சையாக கூறியுள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீரை சுமார் 40 சதவீதம் நிறுத்தியுள்ளது.
கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன.மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ட்விட்டரில் கிருஷ்ணன் பரமேஸ்வரன் என்ற நபர், சென்னை தண்ணீர் பஞ்சம் செய்தியை குறிப்பிட்டு, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மட்டுமே தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என பதிவிட்டார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி, ஆமாம், என்னால் ஆறு மாதங்களில் சென்னையை தண்ணீரில் தன்னிறைவு நகராக மாற்ற முடியும். ஆனால், தமிழர்கள் சினிமா பைத்தியம். எனவே சினிமா நட்சத்திரங்களுக்கு தான் அவர்கள் வாக்களிக்கின்றனர் என சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.
: Yes I can make ChennI self sufficient in water in six months. But Tamils are cinema crazy so they vote for cinema stars
— Subramanian Swamy (@Swamy39) June 19, 2019