ஊருக்கு வந்தே ஐந்து வருஷமாச்சு.... வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரை பொலிசார் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெங்கபாய் என்பவரின் ஒரே மகன் பாபு. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓமன் நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊருக்கு வராத நிலையில், ஒரு வாரத்திற்குள் விடுமுறைக்கு ஊருக்கு வர இருப்பதாக தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று, பாபுவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற அருள் என்பவர், பாபுவின் தாய்க்கு போன் செய்து,

பாபுவை யாரோ கொலைசெய்து அங்குள்ள பாழடைந்த வீட்டில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதாகவும், அவரது சடலத்தை பொலிசார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சேமித்த பணத்தை வீட்டிற்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி வேலை செய்த பணத்தை அங்குள்ள ஒரு நண்பருக்குக் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பணத்தை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்