பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் தாயார்: முக்கிய குற்றவாளியின் தற்போதைய நிலை

Report Print Arbin Arbin in இந்தியா

கேரள மாநிலம் மாவேலிக்கர பகுதி பெண் காவல் அதிகாரியை பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்த முக்கிய குற்றவாளி அஜாஸின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் அஜாஸின் இரு சிறுநீரகங்களும் செயலற்ற நிலையில் உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக தீக்காயங்களுக்காக சிகிச்சையில் இருந்துவரும் முக்கிய குற்றவாளி அஜாஸ், மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மட்டுமின்றி பேச்சும் தெளிவாக இல்லை எனவும், படுக்கையில் இருந்து எழவே சிரமப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவேலிக்கர பகுதியை சேர்ந்த செளமியா என்ற பெண் காவலரை பட்டப்பகலில் நடு சாலையில் வைத்து அஜாஸ் என்ற காவலர் எரித்து கொன்றுள்ளார்.

கொல்லப்பட்ட செளமியாவுக்கும் கைதாகியுள்ள அஜாஸ் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அஜாஸின் குணம் அறிந்த செளமியா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, செளமியா வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

செளமியா மீதுள்ள காதலால் அஜாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செளமியாவுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி செளமியாவை திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதற்கு காரணம் அஜாஸ் என்பவரே என தமது 12 வயது மகன் ரிஷிகேஷிடம் செளமியா கூறியிருந்துள்ளார்.

தற்போது ரிஷிகேஷ் இந்த விடயத்தை விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலமாக அளித்துள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதனிடையே அஜாஸின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்