புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் சுட்டுக்கொலை...

Report Print Abisha in இந்தியா

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட car-ன் உரிமையாளர் அனந்த்நாக் பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டுகள் கொண்ட car ஒன்றை மோதவிட்டு தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் துணை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் தொடர்பாக இராணுவ வீரர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பே, தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட Maruti Eeco car-ன் உரிமையாளரும் பிஜ்பெஹராவைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனுமான Sajjad Bhat மாயமானான்.

இந்நிலையில், அனந்த்நாக்கில் மரஹோம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைத்து தொடர் தாக்குதல் நடத்தினர்.

இந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் Sajjad Bhat ஒருவன் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சண்டையில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடத்தில் இருந்து போருக்குப் பயன்படுத்துவது போன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்