தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்! வைரமுத்துவின் ட்வீட்

Report Print Kabilan in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தமிழக மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் தமிழில் பதவியேற்றதற்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

17வது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது. இன்றைய நிகழ்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதலில் பதவியேற்ற திருவள்ளூர் அமைச்சர் ஜெயக்குமார் அம்பேத்கர் வாழ்க என முழங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் தமிழ் மொழியில் பதவியேற்றனர்.

குறிப்பாக ‘தமிழ் வாழ்க’ என்று அனைவரும் முழங்கினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அமைச்சர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்