ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்பு படையின் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், காயமடைந்த 9 வீரர்களில் இருவர் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அரிஹால்-லஸ்ஸிபோரா சாலை வழியாக, வழக்கமாக பாதுகாப்பு படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களது வாகனம், ஈட்கா அரிஹால் என்ற இடத்தில் வழியாக வந்தபோது, பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 9 வீரர்கள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட 9 வீரர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.