பேருந்து மேலிருந்து கொத்தாக விழும் மாணவர்கள்! பதற வைக்கும் காட்சி

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் 'Bus Day' கொண்டாட்டத்தின்போது, மாணவர்கள் பேருந்தின் மேல் இருந்து கொத்து கொத்தாக கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கோடை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் 'Bus Day' என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, பேருந்துக்கு அலங்காரம் செய்து அதன் கூரை மீது ஏறினர்.

அவர்கள் கூச்சலிட்டபடியே பேருந்து மீது பயணம் செய்தது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. போக்குவரத்தும் வெகுவாக பாதித்தது. இந்நிலையில் தான் பேருந்தின் கூரையின் இருந்த மாணவர்கள் கொத்தாக சாலையில் விழுந்தனர்.

இதில் பலருக்கு அடிபட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார், பேருந்து கூரை மீது பயணம் செய்தவர்கள், படிகட்டில் தொங்கியவர்கள், பேனர் பிடித்தவர்கள் என 17 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் பேருந்தின் மீது இருந்து கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்